அரசாங்க வைத்தியர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசியமைக்காக சுகாதார அமைச்சின் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளகப் பயிற்சியினை முடித்துக் கொண்ட வைத்தியர்கள் மீது சுகாதார அமைச்சின் செயலாளர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக அரசாங்க வைத்தியர்களது தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்மையில் உள்ளகப் பயிற்சியினை முடித்துக் கொண்ட மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கு சுகாதார அமைச்சின் செயலாளரினால் நடாத்தப்பட்டது.
சிங்கள மொழியில் உரையாற்றிய சுகாதார அமைச்சின் செயலாளரை ஆங்கில மொழியில் உரையாற்றுமாறு தமிழ் வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து சுகாதார அமைச்சின் செயலாளர் தமிழ் வைத்தியர்களை தகாத வார்த்தைகளால் பேசி மண்டபத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இதனைத் தெர்டர்ந்து சிங்கள வைத்தியர்களும் இவர்களுக்கு ஆதரவாக மண்டபத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.
வைத்தியர்கள் அவமரியாதைக்கு உட்படுத்தியமைக்காக சுகாதார அமைச்சின் செயலாளர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்க வைத்தியர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment