Monday, August 15, 2011

மக்கள் உடமைகள் பொலிஸாரின் வசம்


பொத்துவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பகுதியில் மர்ம மனிதர் கலவரத்தினை அடுத்து பெருந்தொகையான சைக்கிள்கள் மோட்டடார் சைக்கிள்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையினால் மக்கள் தமது உடமைகளை வீதிகளில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கைவிடப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உடமைகளை பொலிஸார் திருப்பி;த்தர மறுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொத்துவில் பொலிஸ் மீது மக்கள நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மர்ம மனிதர்களுக்கு அடைக்களம் கொடுக்கும் நிறுவனமாகவே பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
போத்துவில் பகுதியில் இடம்பெற்று ஓய்ந்துள்ளதான மர்ம நபர் பீதி மீண்டும் தலைதூக்கியுள்ளது.

போத்துவில் 2 ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஆசறா(26) என்ற பெண்மணி மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்றிரவு தனது அயல் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது இவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கழுத்தில் காயங்களும் மர்ம மனிதனின் நகக் கீறல் அடையாளங்களுடன் குறித்த பெண்மணி பொத்துவில் மாவட்ட வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.



No comments:

Post a Comment