மலையகத்திலுள்ள பட்டதாரிகளுக்கு அரச துறைகளில் தொழில் வாய்ப்பினை பெற்றுகொடுப்பதற்கான நேர்முகப்பரீட்சை கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு நடாத்தவுள்ளது.
இந்த நேசர்முகப்பரீட்சை கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் தலைமையகத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக புதிய தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய மலையகத்திலுள்ள பட்டதாரிகளை தங்களை அமைச்சில் பதிவு செய்துகொள்வதுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி நன்பகல் 12 மணிக்கு நேர்முகப்பரீட்சைக்காக சமூகமளிக்குமாறு கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment