Friday, August 26, 2011

வட மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம்


வடக்கு மாகாணசபைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தலை நடாத்த அரசாங்ம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

போருக்குப் பின்னரான சூழ்நிலையில் குறுகிய காலத்துக்குள் சில விடயங்களை பூர்த்தி செய்யுமாறு அரசாங்கத்தை சர்வதேச நாடுகள் கோரிவருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு குருகிய காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச நாடுகள் கோருவது நியாயமற்றது என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 

சர்வதேச வரலாறுகளை நோக்கும் போது உள்நாட்டு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் குருகிய காலத்தினுள் முன்னேற்றம் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்ன், கம்போடியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட குருகிய காலத்தினுள் முன்னேற்றம் காணவில்லை எனவும் வேறு சில நாடுகளில் இதற்கு சுமார் அரை நூற்றாண்டு காலம் வரை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment