Sunday, August 28, 2011

மத்திய கிழக்கின் நெருக்கடியால் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆண்டுதோறும் இலங்கையினால் ஏற்றுமதி செய்யப்படும் 300 மில்லியன் கிலோ தேயிலையில், 78 வீதமானவற்றை மத்திய கிழக்கு நாடுகளே இறக்குமதி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் இருந்து 55 மில்லியின் கிலோ தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

இது மொத்த தேயிலை ஏற்றுமதியில் 30 வீதம் மட்டும் ஆகும். 

அரசியல் நெருக்கடிகளால் லிபியா, சிரியா போன்ற நாடுகளின் பிரதான துறைமுகங்களுக்கு தேயிலையை அனுப்ப முடியாத நிலை உள்ளதாக இலங்;கையின் முன்னணி தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான மலிக் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையும் தேயிலை ஏற்றுமதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்; கூறியுள்ளார்.  

இதேவேளை, இலங்கையின்  நான்காவது மிகப்பெரிய தேயிலை இறக்குமதி நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் ஆண்டுதோறும் 10 மில்லியன் கிலோ தேயிலை இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்யும் லிபியாவின் சந்தை  பாதிக்கப்பட்டுள்ளதால் தேயிலையினால் பெறப்படும் அந்நிய செலாவனி குறைந்துள்ளதா இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் ஹசித டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment