ஊடகவியலளர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்த காப்புறுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் சேனக்க அபேகுணசேகர தெரிவித்துள்ளார்.
இதன்;படி அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக்ரஹார காப்புறுதியை ஒத்த காப்புறுதி திட்டமொன்றை ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுட் காப்புறுதி மற்றும் சுகாதார காப்புறுதி என்பன இதன்கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் மருத்துவ ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு இந்த காப்புறுதி திட்டம் ஒரு காப்பீடாக அமையும் என தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தங்களின் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்கு ஒரு மில்லியன் ரூபா உயிரிழப்பு தொகையாகவும், நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களுக்கு வருடாந்தம் ஒன்றரை இலட்சம் ரூபாவும்; சத்திர சிகிச்கைகளுக்கு மூன்றரை இலட்ச ரூபா தொகையும் இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் சேனக்க அபேகுணசேகர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment