Saturday, August 20, 2011

தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு தேசியப் பாதுகாப்பு காரணமாம்


தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களது பூர்வீக காணிகளை அரசாங்கம் அபகரித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கின் சில பிரதேசங்களில் தற்போதைக்கு மீள்குடியேற்றுவது சாத்தியமற்ற விடயம் என  அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்திருந்தார்.

தேசிய பாதுகாப்புக்கு இவை அச்சுறுத்தலாக இருப்பதனாலேயே குறித்த பகுதிகளில் மீள்குயேற்றுவது சாததியம் அற்ற விடயம் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரின் கருத்திற்கு விமர்சித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெருமளவான நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களின் உடல் எச்சங்கள் அழியும் வரை உயர் பாதுகாப்பு வலயங்களை அரசாங்கம் அகற்ற தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச போர்க் குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதகற்கான நாடகமே தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படடு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment