Saturday, August 20, 2011

எலிக்காய்ச்சலால் 60 உயிரிழப்பு


எலிக்கசாய்ச்சல் நோயினால் இதுவரை 4 ஆயிரத்து 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் 60 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் விவசாய காணிகள் மற்றும் வயல் வெளிகளில் எலிக்காய்ச்சல் நோய்த் தொற்று அதிகமாக காணப்படுவதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் வயல் வெளிகளில் விளையாடிக் கொண்டிருந்த 15 சிறுவர்கள் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கபட்டு வைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா,குருணாகல்,ஹம்பாந்தோட்மை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சேற்று நிலங்களில் பாதணிகளின்றி நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

எலிக்காய்ச்சல் நோயினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களின் ஊடாக எலிக்காய்ச்சலைத் தவிர்த்துக் கொள்ளுவதற்கான மாத்திரைகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.




No comments:

Post a Comment