Monday, August 22, 2011

மீன்பிடிக்க பாஸ நடைமுறை மீள அமுலில்


வடபகுதியில் மீன்பிடிப்பதற்கு தளர்த்தப்பட்டிருந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கi இந்திய மீனர்வகளுக்கிடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் போதல்கள் காரணமாகவே இந்த பாஸ் நடைமுறை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மீனவர்களிடம் புகைப்படங்கள், தேசிய அடையாள அட்டை பிரதி மற்றும் பொலிஸ் பதிவு ஆகியன சேகரிக்கப்பட்டு வருவதாகம் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து மீனவர்கள் பெரம் அசௌகரியங்களை எதிர்நோக்குவதோடு மீன் பிடி தொழிலுக்கு செல்ல தாமதம் காட்டி வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடித் தொழிலுக்குத் தடைவிதிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் மன்னார் கடற்பிராந்தியத்தில்; மீன்பிடியைத் தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாட்டில் எண்ணெய்ப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் கடற்படையினரின் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்தும்படி கோரப்பட்டுள்ளதாகவும் வர்த்தகக் கப்பல் துறைப் பணிப்பாளர் நாயகம் சாந்த வீரகோன்; கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் மீன்பிடித் தடை விதிக்கப்பட்டால் வறுமைக்கோட்டின் வாழ்பவர்களே தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என கடல்துறை மற்றும் கடல்தொழில் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.



No comments:

Post a Comment