ஆசிய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளியே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணமாக கருதப்படுகின்றது.
ஆசிய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் நாளை இலங்கை வரவிருந்தது குறிபிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஐரின் சூறாவளியால் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களது தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 24 மணி நேர அவசர தொலைபேசி சேவையொன்றினையும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த அவசர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
00 12 023 520 355 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, இலங்கையில் உள்ளவர்கள், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவராலயத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
இதன் மூலம் அமெரிகாவில் உள்ள தமது உறவினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுரகம் அறிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூறாவளியானது, அமெரிக்காவின் கிழக்கு கரையோர பிரதேசத்தின் ஊடாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக அந்நாட்டு வானிலை நிலையம்; தெரிவித்துள்ளது.
இதனால் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்த சூறாவளி காரணமாக மேலும் ஆறு பிராந்தியங்கள் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கிருந்தும், மக்களை வெளியேற் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து;ளளது.
No comments:
Post a Comment