Wednesday, August 24, 2011

ஈழத்துக்கு தேர்தல்கள் ஆணையாளர் ஆதரவு


ஈழம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை தேர்தல்கள் செலகம் ரத்துச் செய்யவுள்ளதாக வெளியான செய்தி  உண்மைக்குப் புறம்பானது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களில் ‘ஈழம்’ என்ற சொல்லை உள்ளடக்கியதான கட்சிகள் தடைசெய்யப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழம் என்ற சொல்லானது இலங்கை என்ற சொல்லின் இன்னொரு பொருள் என்பதனால் அதனைத் தடை செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிப்பட்ட சில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களில் போட்டியிடாமை மற்றும்  தங்களது கட்சிகள் தொடர்பான தகவல்களை வழங்காமை போன்ற காரணங்களாலே  அவற்றை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இது தேர்தல் திணைக்கள சட்ட விதிகளுடன் தொடர்புடைய விடயம் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment