Monday, August 22, 2011

பாலியல் ஊக்க மருந்திற்கு மாணவர்கள் மத்தியில் கிராக்கி



நாட்டில் பாலியல் ஊக்கமருந்து பாவனையாளர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் சாந்த ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்திலேயே அதன் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொட, கொட்டாவ மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளிலேயே இந்த மருந்து வகைகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாலியல் குறைபாடுகள் இல்வாதவர்களும் பாலியல் ஊக்க மருந்து வகைகளை அதிகம் பயன்படுத்தி வருவதாக வைத்திய அதிகாரி சாந்த ஹெட்டிஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்களின் ஆலோசனையின்றி ஊக்கமருந்துகளை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment