இலங்கையில் உள்ள யானைகளின் எண்ணிக்கை எதிhவரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் யானைகளின் எண்ணிக்கையினை மதிப்பிடும் நடவடிக்கை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கபக்பட்டது
தற்போது யானைகளின் விபரங்களைத் தரவு படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் டிஜிடல் மற்றும் கணணி விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பெறப்பட்டுள்ள யானைகளின் விபரங்கள் தற்போது கணணி மயப்படுத்தப்பட்டு வருகின்றன.
யானைகளின் வயது, நிறை, பால் மற்றும் உடலியல் கூறுகளின் அடிப்படையில் இந்த தரவேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.டி ரத்நாயக்க மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவுத் தலைவர் பேராசிரியர் பராக்கிரம கருணாரத்ன ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த கணணி மயப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment