உள்ளூரில் இணைய சேவையினை வழங்குபவர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகிவதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இணைய சேவை வழங்குநர்களால் விளம்பரப்படுத்தப்படும் இணைய வேகத்தினை அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை என அந்த ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
தங்களது விளம்பரங்களுக்கு ஏற்ப இணைய வேகத்தினை அதிகரிக்காத சேவை வழங்குனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.
இணைய வேகத்தினை மதிப்பிடும் நடவடிக்கைகள் தொலைத்தொடர்பு ஆணைக் குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இணைய வேகம் தொடர்பில் சேவை வழங்குனர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதம் தொடர்பில் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு விளம்பரம் ஒன்றினைத் தயாரித்து வருவதாகவும் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் 6 லட்சம் இணைய பாவனையாளர்கள் காணப்படுகின்ற அதேவேளை கடந்த ஆண்டில் இணைய பாவனையாகளின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் 3 லட்சத்திற்கும் இடையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment