Sunday, September 4, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகள் அம்பலப்படுத்தப்படும் - மன்னிப்பு சபை எச்சரிக்கை


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகளை அம்பலப்பத்த சர்வதேச மன்னிப்புச்சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை இனங்காண்பதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதி அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை அம்பலப்படுத்தவுள்ளதாக எச்சரித்துள்ளது.

ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சர்ச்சை நிலவி வருவதாகவும் அந்த சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

கிறீஸ் மனிதர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்


யாழ். குடாவில் கிரீஸ் மனிதர்கள் தொடர்பில் பெரிஸாருக்கு தகவல் தருவதற்கு இரு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

0773588778 மற்றும் 021-3211257 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் பொதுமக்கள் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா அறிவித்துள்ளாhர்.

கிரீஸ் மனிதன் என்பது ஒரு வதந்தியே அதனை நம்பி கலகங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறீஸ் மனிதன் என்ற சர்ச்சை ஏற்பட்டதும் மக்கள் வீதியில் இறங்கி பிரச்சினைகளை மேலும் வலுப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.


பிற்போடப்பட் முல்லைத்தீவு மாவட்ட இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலhல் சர்ச்சை



முல்லைத்தீவு மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு உள்ளுராட்சி சபைகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் வேட்பாளர்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவிருந்த இரு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்த 6 அரசாங்க ஊழியர்கள் மத்தியிலேயே புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

குறித்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்றுக்கொண்ட சம்பளமற்ற விடுமுறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த வேட்பாளர்கள் தமது தொழிலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்து பிரச்சினை தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக குறித்த வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தசிய கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது


நாட்டின் கல்வித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வித்துறை மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கென இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய கல்விக் கொள்கை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதுடன், 2012 ஆம் கல்வியாண்டு முதல் புதிய கொள்கையை அமுல்படுத்பத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டம், பரீட்சைகள், ஆசிரியர் கைநூல், பரீட்சை மதிப்பீடுகள், ஆசிரியர் இடமாற்றம், ஆசிரியர் நியமனம், போன்றவற்றில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளதுடன்,

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள், தரம் ஒன்றிற்கான அனுமதி, புலமைப் பரிசில், உயர்தரம், ஆசிரியர் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் கல்வித்துறை தற்போது எதிர்நோக்கி வரும் சகல பிரச்சினைகளுக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஊடாக தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கல்வி கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து கடந்த ஜனவரி மாதம் முதல் கல்வி மறுசீரமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு 24 தடவைகள் கூடி ஆய்வு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தரம் குறைந்த பெற்றோலுக்கான நஷ'டயீட்டினை இறக்குமதி செய்த நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க பெற்றோலிய வளத்துறை அமைச்சு தீர்மானம்


தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியினால் ஏற்பட்டுள்ள நட்டத்தையும் இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து அறவிட திட்டமிட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியினால் இதுவரையில் 41 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் தரம் குறைந்த பெற்றோல் சந்தைக்கு விநியோகம் செய்ய முடியாமல் தேங்கிக் கிடப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள நட்டத்தை தரம் குறைந்த பெற்றோலை இறக்குமதி செய்த சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து அறவிடவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கூட்டுத்தாபனத்தில் தேங்கியுள்ள தரம் குறைந்த பெற்றோலை சந்தைக்கு விநியோகம் செய்ய முடியாத காரணத்தினால் அதனை நெப்டா எரிபொருளாக மாற்றி, இலங்கை மின்சாரசபைக்கு வழங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை தரம் குறைந்த பெற்றோலை தாம்; வழங்கவில்லை எனவும் அதனால் ஏற்பட்ட நட்டத்தை பொறுப்பேற்க முடியாது எனவும் குறித்த சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்


நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மூன்றாம் தவனை கற்றல் கற்பித்தல் நவடிக்கைகக்காக நாளை திறக்கப்படவுள்ளன.

நாட்டிலுள்ள தமிழ் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளுக்கு கடந்த 4 ஆம் திகதியும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஜூலை 29 ஆம் திகதியும் இரண்டாம் தவனைக்காக விடுமுறை வழங்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளைய தினம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் ஆரம்பமாகும் மூன்றாம் தவணை டிசம்பர் 9 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்காக மீண்டும் மூடப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, September 3, 2011

திருத்தப்ட்ட பின்னர் விடைத்தாள்கள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும் - கல்வி அமைச்சு


பல்கலைக் கழக மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதன் பின்னர் அவற்றை மாணவர்களிடம் கையளிக்க உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக உப வேந்தர்கள் குறித்த நடவடிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். 

விடைத்தாள்களை திருத்தும் போது, சில விரிவுரையாளர்கள் உரிய வகையில் திருத்தும் பணிகளை மேற்கொள்வதில்லை என மாணவர்கள் மேற்கொண்ட முறைபாட்டினை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காம சூரனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு


சிறுவர் துஷ்பிரோயகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவருக்கு பிணை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜா எல பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீதான முழுமையாக நிறைவு பெறாத பட்சத்தில் குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க முடியாது என நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த நபருக்கு எதிராக கண்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிபுணர்க்குழு அறிக்கை ஏனைய அமைப்புகளின் பரிந்துரைகளுககு விடப்படவுள்ளது


நிபுணர்க்குழு அறிக்கையினை ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களிடம் சமர்ப்பிப்பது குறித்து அந்த சபை ஆலோசித்து  வருவதாக ஐ. நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். 

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு ஆலேசானை வழங்கும் நோக்கில் தாருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய குழு இந்த அறிக்கையை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை ஐ.நா செயலாளர் மட்டத்தில் மாத்திரம் தங்கி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையினை அதன் கிளை நிறுவனங்கள் மற்றும் ஏனைய சபைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஐஇநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஐ. நாவின் செயலாளர் நாயகம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையை பர்ஹான் ஹக் உறுதிப்படுத்தியுள்ளார்.

பலஸ்தீன தனிஅரசுக் கோரிக்கைக்கு இலங்கை ஆதரவு


ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவுள்ள பலஸ்தீனத்தினைத் தனிநாடாக அங்கீகரிப்பதற்கான பிரேரணைக்கு இலங்கை ஆதரவளிக்கவுள்ளது.

ஐக்கிய நாடுகளின்;, இம்மாதம் நடைபெறவுள்ள பொதுச் சபைக் கூட்டத்தில் பலஸ்தீனம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு பலஸ்தீனத்தை சுயாதீன நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பலஸ்தீன பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர். 

சுமர் 193 நாடுகளில் 124 நாடுகள் ஏற்கனவே தமது கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் இன்னும்; ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பே தேவைப்படுவதாகவும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ; அன்வர் அல் அகா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கடயைமாற்றிவரும் தமது நாட்டு தூதுவர்கள் ஆதரவு திரட்டும் முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போகம்புர சிறைக்கiதிகளுக்கு தொழிற்பயிற்சி


போகம்பரை சிறைக் கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலைக் கைதிகளின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பொருட்டே நடவடிக்கையாக இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வேலைத் திட்டம் தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக நிறுவனப் பணிப்பாளர் மீதான தாக்குதல் சூத்திரதாரி சந்தேகத்தில் கைது


வீ.எப்.எம் வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர் ருவான் சுகததாச மீதான தாக்குதலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாதிவெல பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் விசாரணைககளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

பொரலெஸ்கமுவவிலுள்ள தனது வீட்டுக்கு அலுவலகத்திலிருந்து சென்று கொண்டிருந்த போது வீ.எப்.எம் வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர் ருவான் சுகததாச நேற்றிரவு 7.30 அளவில் தாக்கப்பட்டார்.
தாக்குதலில் காயமடைந்துள்ள அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.