Wednesday, September 2, 2015

அமைச்சுக்கள் தொடர்பில் விவாதம்

புதிதாக அமையப்பெற்ற அரசாங்கத்தின் அமைச்சரவை 93 ஆக நிர்ணயிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளார்.

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் பிரகாரம் தேசிய அரசாங்கம் அமையுமிடத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 48 ஐ விஞ்சக் கூடாது. அத்துடன் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுக்கள் 45 ஐ மிகைக்கக் கூடாது.

இந்த ஏற்பாட்டின் பிரகாரம் 93 அமைச்சர்கள் கொண்ட அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கக் கோரி நாடாளுமன்ற செயலாளரிடம் பிரதமர் அனுமதி கோரியுள்ளார்.

நாளைய நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது.

புதிய அமைச்சரவை நாளை மறுநாள் அமையவுள்ளது.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

நாடாளுமன்றம் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

8 ஆவது நாடாளுமன்றம் நேற்று கூடியது. சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தெரிவுகள் இடம் பெற்றன.

எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இழுபறி நிலை தொடர்கிறது.

நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் எதிர் கட்சி தலைவர் நியமிக்கப்படலாம் என ஏதிர்பார்க்கப்படுகிறது

Tuesday, September 1, 2015

கலாசார அலுவல்கள் திணைக்கள வேலைவாய்ப்புகள்

தேசிய மிருகவியல் பூங்கா வேலைவாய்ப்புகள்

சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார்

நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை நாடாளுமன்ற சபை முதல்வவராக லக்ஷ்மன் கிரியெல்லவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.


புதிய சபாநாயகருக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் 

நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இன்றைய அமர்வில் சில உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை என எமது செய்தியாளர் குறிப்படுகிறார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று

புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற கன்னி அமர்வு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய அமர்வில் உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், சபாநாயகர் தெரிவு என்பன இடம்பெறவுள்ளன.

பி.பகல் 3 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரையாற்றவுள்ளார்.

சட்டக் கல்லூரிக்கான போட்டிப் பரீட்சை

இலங்கை சட்டமன்றக் கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து அநுமதி அட்டை கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரிகள் குறித்த போட்டிப் பரீட்சையை எதிர்கொள்ள முடியும்.

கொழும்பு சட்டக் கல்லூரி வளாகத்தினுள் மேற்படி  பரீட்சை  இடம்பெறவுள்ளது.