ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தின் போது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தொடர்ந்து வழங்க முடியாத அரசாங்கம் ஆயிரம் பாடசாலைகளை எவ்வாறு அபிவிருத்தி செய்ய போகின்றது என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
ஐந்தாம் தர மாணவர்களுக்கு வருடத்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற புலமை பரிசில் பரீட்சையானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வௌ;வேறு நேரங்களில் நடைபெற்றது.
நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் புலமை பரிசில் பரீட்சையை நடத்தமுடியாத அரசாங்கத்திற்கு கல்வி அமைச்சர் மற்றும் பரீட்சை ஆணையாளர் தேவையா எனவும் அரசாங்கத்திடம் கேட்க கடமைபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வி பொது தராதர உயர் தரபரீட்சையானது உயர்தர பாட விதானத்தில் உள்ளடக்கப்படாத சில விடயங்களும் வினாக்களாக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாககும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே இதுவாகும் எனவும் அவர் குற்றம்சுமத்தினார்.
அத்துடன் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் போது நூற்றக்கு 75 வீதமான அதிபர்கள் பணம் பெற்றுக்கொண்டதன் பின்னரே அனுமதியினை வழங்குகின்றனர்.
இவ்வாறு பணம் பெற்றுக்கொள்ளும் அதிபர்கள் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களாகவே காணப்படுகின்றனர்.
குறித்த அதிபர் பதவியில் உள்ளவர்கள் மீது எந்த விதாமன சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத நிலை நாட்டில் காணப்படுகின்றது.
இதற்கமைய குறித்த அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஆளும் அரசாங்க தரப்பிலுள்ள அமைச்சர்களின் சிபாரிசுகளினால் குற்றத்திலிருந்து தப்பித்து கொள்கின்றனர்.
எது நாட்டில் காணப்படுகின்ற கல்வி முறையினை முறையாக முன்னெடுக்கும் பட்சத்தில் கல்வி துறையில் பாரிய வளர்ச்சியினை எமது பெற்றுக்கொள்ளும்.
ஆனால் எமது நாட்டிலுள்ள ஊழல் மோசடிகளால் கல்வி துறையும் பாதிப்படைந்து வருவதை எதிர்கட்சி சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பகல் நேர உணவு போன்றவற்றை ஐக்கிய தேசிய கட்சி அறிமுகம் செய்து வைத்தது.
ஆனால் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளதா என நோக்கும் போது சில பாடசாலைகளுக்கு இதுவரையில் இலவச சீருடை கிடைக்கவில்லை.
பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவுவும் அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அரசாங்கம் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யபோவதாக அறிவித்துள்ளமை எந்தவகையில் சாத்தியமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.