24 ஊடக நிறுவனங்களுக்கு கடந்த 6 வருடங்களில் ஊடக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இவற்றுள் 14 வானொலி நிறுவனங்களும் 12 தொலைக்காட்சி நிறுவனங்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிலையான தொலைபேசிச் சேவை ஒன்றிற்கும் இரண்டு கையடக்க தொலைபேசி நிறுவனங்களுக்கும் இரண்டு இணைய சேவை நிறுனங்களுக்கும் 3 செய்மதித் தொலைக்காட்சி சேவைகளுக்கும் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஊடக நிறுவனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவது ஊடக அமைச்சின் அதிகாரத்துக்குட்பட்ட ஒரு விடயம் எனவும் அவற்றுக்கான அலை வரிசையினை வழங்குவது தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment