Monday, August 29, 2011

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளிவிவகார அமைச்சர்



கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

கச்சதீவு இலங்கையின் எல்லைக்குள் அமைந்திருப்பதால் இந்தியா அந்த தீவிற்கு உரிமை கோருவது அநாகரிகமான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் கடல் எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் இலங்கை - இந்திய நாடுகளுக்கு  இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென காலத்திற்கு காலம் தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் வெளிவிவகார அமைச்சரின் கருத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

இதேவேளை, கச்சத்தீவில் வலைகளை உலர வைப்பதற்கும் புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை இருப்பதாக அமைச்சர் கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த தீவை அண்டிய பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment