Saturday, August 13, 2011

மர்ம மனிதர்களது விடயத்தில் அரசு அசமந்தம்


மர்ம மனிதர்கள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண’டு வரும் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கிழக்கு மாகாண முஸ்லீம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் போது பொலிஸார் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களால் நோன்பு கால இரவு வணக்க வழிபாடுகளுக்காக மக்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சி வருவதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசர தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் மர்ம மனிதர் அச்சத்தினை களைவதற்கு பொலிஸார் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தெர்டர்பில் பொலிஸ் மா அதிபரிருக்கு அவசர கடிதம் ஒன்றினையும் தலைவர் ரவூக் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த பகுதிகளில் நிலவும் அச்சததினைத் தணித்து மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு அநத கடிதத்தில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment