போதைப் பொருள் உற்பத்தியினால் நாட்டிற்கு 22 ஆயிரத்து 725 மில்லியன் மூபாக்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
போதைப் பொருள் உற்பத்தியினால் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் அரசுக்குக் கிடைத்த ஆகக் கூடிய வருமானமாக இது கருதப்படுகின்றது.
நாட்டில் போதைப் பொருள் உற்பத்தி 42 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டள்ளது.
போதைப் பொருட்களின் விலையினை அதிகரிப்பதன் மூலம் அதன் பாவனையினைக் குறைக்க முடியும் என அரசாங்கம் நம்புகின்றது.
இந்நிலையில் போதை பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment