திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற கலவரத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
கிண்ணியா பகுதியில் நடமாடிய மர்ம மனிதனை அப்பகுதி இளைஞர்கள் விரட்;டிச் சென்ற போது அவர் கிண்ணியா கடற்படை முகாமில் தஞ்சமடைந்துள்ளார்.
குறித்த மர்ம நபரை விடுவிக்குமாறு கோரிய இளைஞர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதில் கடற்படை முகாம் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் ஜீப் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன் பின்னர் 25 பொதுமக்களை பொலிஸார் எவ்வித விசாரணைகளும் இன்றி கைது செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment