Monday, August 22, 2011

அடிப்படை வசதிகள் இன்றி பூந்தோட்ட மக்கள்


வவுனியா பூந்தோட்டம் முகாம்மில் தங்க வைக்கப்பட்டிருந்த 187 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக முகாமில் தங்கியுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து கடந்த 16 வருடங்களாக வவுனியா பூந்தோட்டம் 187 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 200 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் ஆகியவற்றை அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக துண்டித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பூந்தோட்ட முகாமில் தங்கியுள்ளவர்களை கிளிநொச்சியில் மீள்குடியேற்ற தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ள போதிலும் அவர்கள் மீள்குடியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் வவுனியாவில், காணிகளும் வீடுகளும் வழங்கப்பட வேண்டும் என அந்த மக்கள் கோரி வருவதாகவும் இது நியாயமற்ற கோரிக்கை எனவும் பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவு காரணமாக தாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment