Tuesday, August 30, 2011

தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் திறப்'பு விழாவுக்கு அநுமதி மறுக்குமாறு பொலிஸார் கோரிக்கை


குருணாகலை – இப்பாகமுவ பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவுக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கொகரல்ல பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நேற்றைய தினம் குருணாகல் மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதனை ஆராய்ந்த மாவட்ட நீதிமன்றம் குறித்த மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழா நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள விடுதலை முன்னணி உறுப்பினர்களின் நிதியுதவியுடன் இந்த வீட்டுத் திட்டம் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment