நாட்டைப் பாதுகாப்பத்ற்காக இரத்தம் சிந்திய தான் சிறைச்சாலையில் மின்விசிறி ஒன்றினைப் பெறுவதற்கும் நீதிமன்ற உத்தரவு பெற வேண்டியுள்ளதாக கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக உயர் நீத்தவர்கள் மற்றும் இரத்தம் சிந்தியவர்களை இந்த அரசாங்கம் மதிப்பதில்லை எனவும் தேசத்துரோகிகளுக்கே அரசாங்கம் அடைக்களம் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடற்கூற்று சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு நேற்று அழைத்து வரப்பட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கே.பி எனப்படும் குமரன் பத்மநாபனை அரசாங்கம் கொழும்பில் சொகுசு வீடொன்றில் வைத்து தாலாட்டி வருவதாக முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேக்கா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment