Sunday, August 28, 2011

நாடு முழுவதும் கடற்படை முகாம்கள்


வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாடு முழுவதும் கடற்படை முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி  வைஸ் அட்மிரல் டீ. டபிள்யு. ஏ. எஸ் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

நாட்டில்; தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காதவாறு பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டே நாடு முழுவதும் கடற்படை முகாம்கள் அமைக்கபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடல் மார்க்கமாக மெற்கொள்ளப்படும் சட்ட விரோத ஆட்கடத்தல் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதனைத் தடுக்க இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக முல்லைத்தீவு, முள்ளிக்குளம் மற்றும் பாணமை ஆகிய பிரதேசங்களில் கடற்படை முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி  வைஸ் அட்மிரல் டீ. டபிள்யு. ஏ. எஸ் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment