முல்லைத்தீவு மாவட்டத்தின் எஞ்சியுள்ள இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் குறித்து இன்று தீhமானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் வடக்குக்கு வெளியில் தேர்தல் இடம்பெறாத பிரதேசங்களின் தேர்தலுடன் ஒரே தடவையில் நடத்துவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணி வெடி அகற்றப்படாமை மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெறாமை போன்ற காரணங்களினால் குறித்த இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment