Friday, August 26, 2011

மகாவ பிரதேசசபைத் தவிசாளாழன் பதவி பறிமுதல்


மகாவ பிரதேச சபைத் தவிசாளர் பதவியிலிருந்து பந்துல புஷ்பகுமார தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மகாவ பிரதேச சபை உறுப்பினர்களால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து வட மேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க வினால் இவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது கடமைகளை  மகாவ பிரதேச சபையின் பிரதித் தவிசாளரான றோகன வசந்த குமார மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment