சர்வதேச ரீதியில் இலங்கை மீது எழுந்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் வல்லமை அரசாங்த்திடம் காணப்படுவதாக வெளவிவிகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தீவிரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமையே சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கான காரணமாகும்.
நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் பயத்தையும் பீதியையும் ஏற்படுத்திய தீவிரவாதம் ஒழிக்கப்பட்டையே சர்வதேச நாடுகளின் பார்வையில் இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் அடியணியாது எனக் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர்,
மக்கள் சக்தியுடன் இத்தகைய குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ளும் வல்லமை அரசிடம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்;கத்தின் மீது போலிக் குற்றஞ்சாட்டுக்களை சுமத்தி விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பவர்கள் கள நிலவரத்தினை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment