உலகின் புதுமை படைக்கும் ஆசிரியர்களின் பட்டியலில் முதல் 50 பேர்களுள் இலங்கையர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் இந்த கணிப்பீட்டில் இலங்கையைச் சேர்ந்த மொகிடீன் பாவா ஹஸீன் என்ற ஆசிரியரே இவ்வாறு இடம்பிடித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் உலகின் புதுமை படைக்கும் ஆசிரியர் போட்டியில் உலகின் 114 நாடுகளில் இருந்து 500 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதல் 50 பேர்களுள் ஒருவராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொகிடீன் பாவா ஹஸீன் இலங்கையின் கிழக்கு மாகாணத்;தைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
அத்துடன் சம்மாந்துறை மத்திய கல்லூரியின் கணணி கற்கை நிலையத்தின் பொறுப்பாசிரியராகவும் கிழக்கு மாகாணத்தின் இலத்திரனியல் கிராம செயற்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment