தேசிய மொழிக் கொள்கை துஷபிரயோகம் தொடர்பில் மக்கள் நேரடியாக தம்மிடம் முறையிட முடியும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மொழிக் கொள்கை துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தொலைபேசி இலக்கம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
0112 871 378 என்ற இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேசிய மொழிக் கொள்கையினை துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை 400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை அரச வங்கிகளில் தமிழ் மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படாமை தொடர்பானதாகும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அரச கருமங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மாத்திரம் வழங்கப்படுவதாக அரச ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment