Wednesday, August 17, 2011

ரஷ்ய எண்ணெய் அகழ்வுக் குழு இலங்கையில்


இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு ரஷ்ய தூதுக்குழு ஒன்று இலங்கை வந்துள்ளது.

இந்த தூதுக்குழு நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜ+_ன் மாதம்; ரஷ்யாவிற்கு  மேற்கொண்ட விஜயத்தின் பலனாக அந்நாட்டு அகழ்வாராய்ச்சி உத்தியோகத்தர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள தூதுக்குழு, மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ளது.

அத்துடன் அகழ்வாய்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான அனைத்து பயிற்சி செலவீனங்களையும் ரஷ்யா பொருப்பேற்கவுள்ளது.

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளில் இந்திய மற்றும் சீன அதிகாரிகள் தற்போது பணி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment