முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின்; தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு கிடையாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள மூவரின் கருணை மனுக்கள் இந்திய ஜனாதிபதி பிரதீப்பா பட்டேலினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய ஜனாதிபதியினால் நிராகரித்த பின்னர் அந்த தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டு;ளளார்.
எனினும் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியை அணுகுவதே சிறந்தது என முதல்வர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment