நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் நூற்று இருபத்தியொரு பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் 16 ஆயிரத்து 500 ற்கும் அதிகமான டெங்கு நோயாளிகள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 58 மரண சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
குறித்த மாவட்டத்தில் இருந்து 6 ஆயிரத்து 563 பேர் டெங்கு நோயாளிகளாக இனங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் அதிகூடிய டெங்கு தாக்கம் நிலவுகின்ற மாவட்டமாக கொழும்பு திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment