Sunday, August 28, 2011

புதிய சட்டமா அதிபராக சொலிஸ்டர் ஜெனரல் ஈவா வணசுந்தர நியமிக்கப்படும் சாத்தியம்.


இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சொலிஸ்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஈவா வணசுந்தர நியமிக்கப்படவுள்ளார்.

சட்டமா அதிபரர் மொஹான் பீரிஸ் எதிர்வரும் 31 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது வெற்றிடத்திற்கே சொலிஸ்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியான ஈவா வணசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் வகிக்கும் சொலிஸ்டர் ஜெனரல் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியான பாலத பெர்னாண்டோ நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தற்போதைய சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அமைச்சரவையின் சிரேஷ்ட சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment