இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்த மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டு மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறைகள் தொடர்பிலும் சர்வதேச மட்டத்தில் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவூட்டுவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதற்காக அடுத்த மாதம் முதல் நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக அக்கட்சியின் விழிப்புணர்வூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்துஇரு வாரங்களுக்கு இந்த மக்கள் விழிப்பூட்டல் நடவடிக்கை அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாசார ரீதியில் அரசாங்கம் மக்களை நசுக்கி வருவது தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment