Sunday, August 21, 2011

பிரான்ஸ{க்கான இலங்கைத் தூதுவர் க பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு


பிரான்ஸ{க்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் மலிந்த செனவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

தூதுவர் தயான் ஜயதிலக நாட்டில் பிரிவினை வாதத்தை தூண்டும் சக்திகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தயான் ஜயதிலகவின் துரோகத்தனத்தை ஏற்றுக் கொள்வதற்கு நாடு தயாராக இல்லை எனவும் அவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் கையயெழுத்து வேட்டை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தயான் ஜயதிலக இடதுசாரி சிந்தனையாளராக இருந்த போதிலும் பின்னர் ஒரு பேரினவாத சிந்தனை சார்ந்தே தன்னை மாற்றிக் கொண்டு செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment