தமிழ் மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தை அரசாங்கம் வெற்றி கொண்டுள்ள போதிலும் தமிழ் மக்களின் இதயங்களை சென்றெடுக்க தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்கள் தொடர்பில் ஆலாசனைகள் கூறப்படுவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயார் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமிழ் மக்களின் மன நிலையை நன்க அறிந்தவர்கள் என்ற ரீதியில் தாம் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் இதயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மாத்திரமே நிரந்தர தீர்வுத்திட்டம் ஒன்றை இலங்கையில் கொண்டு வரமுடியும் எனவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment