Sunday, August 21, 2011

கையடக்க தொலைபேசிக் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை


தொலைபேசிக் கட்டணங்களை குறைக்குமாறு தொலைபேசிச் சேவை வழங்குனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில’ கையடக்க தெலைபேசிக் கட்டணங்களைக் குறைக்குமாறு தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு சேவை வழங்குனர்களிடம் கேட்டுக் கொண்டது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து கையடக்க தொலைபேசிக் கட்டணங்களைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தும் இதுவரை கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கும் கையடக்க தொலைபேசிச் சேவை வழங்குனர்களுக்கும் இடையில் சந்திப்பொன்றினை விரைவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.


.

No comments:

Post a Comment