Friday, August 26, 2011

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்ப முயன்றதாக மின் சக்தி அமைச்சர் தெரிவிப்பு.



தமிழீழ விடுதலைப்புலிகளின்  தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கிய  உறுப்பினர்கள்  இறுதிக் கட்ட போரின் போது ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கு செய்தது போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் கொலை செய்ய சில சக்திகள் முயற்சிப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

1970 மற்றும் 80களில் காணப்பட்ட நிலைமைகளை வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியாகவே மர்ம மனிதர்கள் போன்ற நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment