Tuesday, August 30, 2011

மிருக பலிக்கு எதிரான மனு நிராகரிப்பு


சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் திகதிவரை ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலபம் முன்னேஸ்வரம் கோயிலில் வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்த மிருக பலி பூஜைக்கு அனுமதிப் பத்திரம் வழங்காமல் இருக்க சிலாபம் நகரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிடுமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு 14 பௌத்த அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ஜாதிக ஹெல உருமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளை நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment