ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களது நம்பிக்கையினை பாதுகாக்கும் பொருட்டு உறுதியான தீர்மானத்தினை தலைமைத்துவம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தன்னால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தினால் கட்சியினுள் பிளவினை ஏற்படுத்த நினைப்பவர்கள் வருந்த எதிர்காலத்தில் வேண்டிவரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கட்சியின் பாதுகாப்பு மற்றும் மக்களது நம்பிக்கையினை பேணும் பொருட்டு தீர்க்கமான ஒரு முடிவொன்றினை அடைந்து கொள்வது காலத்தின் தேவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment