யாழ். அரியாலை நாவலடிப் பகுதியில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மானிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீடுகள் தரமற்றவை என்ற காரணத்தினாலேயே இந்த திட்டம் இடைநிறுத்த்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் 150 வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அரியாலை நாவலடிப் பகுதியில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட பொறியியல் குழுவினரால் இந்த வீடமைப்புத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரமான முறையில் இந்த வீடமைப்புத் திட்டம் அமைய வில்லை என அவர் சுட்டிக்காட்டியதை அடுத்து வீடமைப்புப் பணிகளை இடைநிறுத்த நேரிட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வீடமைப்புத் திட்டம் ஆய்வு செய்யப்பட்டு தரமான வீடுகளாக நிர்மானிக்கப்பட்ட பின்னர் கட்டுமானப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment