ஐஸ்லாந்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு மக்களின் கருத்துக்களுக்கமைவாக உருவாக்கப்பட்டதென அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தின் அரசியல் யாப்பில் உள்ள அனைத்து சரத்துக்களும் சமூக இணையத்தளங்களான முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றின் ஊடாக விவாதிக்கப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அரசியல் யாப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மக்களின் அபிப்பிராய கணக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
1944 ஆம் ஆண்டு டென்மார்க்கிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஐஸ்லாந்து அதன் அரசியல் யாப்பில் சிறிய மாற்றங்களை மாத்திரமே மேற்கொண்டுள்ளதோடு இதுவரையில் அதனையே பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அதன் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கிணங்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு 950 பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கு தொலைக்காட்சி, வானொலி, விக்கிபீடியா, முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலிருந்து பங்களிப்பு பெறப்பட்டதாக ஜஸ்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மக்கள் கருத்திற்கு விடப்பட்டவுள்ள யாப்பானது மக்களின் அங்கிகாரத்துடன் அமுலுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 லட்சத்து 20 ஆயிரம் மொத்த சனத்தொகையை கொண்ட ஐஸ்லாந்தில் 80 சதவீதமானோர் இணையத்தள பாவனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment