Wednesday, August 24, 2011

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு இலங்கை ஆதரவா?


தென்சூடானின் சுதந்திர விழாவிற்கு இலங்கையின் பிரதிநிதியாக விஜயம் செய்த சிரேஷ்ட்ட அமைச்சர் பேராசியரியர் திஸ்ஸ விதாரன நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அமர்ந்திருந்தார் என்பது வெறும் கட்டுக்கதை என ஆளும் கட்சியின் பிரதம கொறதினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் திஸ்ஸ விதாரன அமர்ந்திருந்தார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண நாடு கடந்த தமழீழ அரசாங்க பிரதி நிதிகளுடன் அமைர்ந்திருக்க வில்லை எனவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா தெரிவித்தார்.

No comments:

Post a Comment