Saturday, August 27, 2011

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையால் இலங்கையின் அபிவிருத்தி இலகுவாக முன்னெடுக்கப்பட வாய்ப்பு அமெரிக்கா புகழாரம


இலங்கையின் அபிவிருத்திப் பணிகள் இலகுவாக முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை உதவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்காவின் அரச பேச்சாளர் Victoria Nuland  கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் றொபெட் ஓ பிளேக்கும் அமெரிக்காவின் இந்த கோரிக்கையினை வலியுறுத்துவார் எனவும் அவர் குறிபபிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிர்வரும் வாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள இவர் அரச தரப்பினர், கட்சித் தலைவர்கள், மனித உரிமைகள் குழுக்கள், சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், மற்றும் பல்கலைக்கழக மாணவர்களையும் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அரச பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதற்திரமானதும் நீதியானதுமான விசாரணைகள மேற்கொள்ளப்படும் வரை அமெரிக்க தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என அமெரிக்காவின் அரச பேச்சாளர் Victoria Nuland குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையின் பின்னர் முதலாவதாக வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் இலங்கைக்கு வருவது இவரது விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment