அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதனால் பொலிஸாரின் அதிகாரம் குறையபோவதில்லை என பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
சிவில் சட்டத்தை அமுல்படுத்தும் போது பொலிஸ் திணைக்களம் இதற்கு முன்னர் செயற்பட்டதைப் போன்றே தனது நடவடிக்கைகளை முன்னெடுக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்தல், ஓரிடத்தை சோதனையிடல், வாகனங்களை பரிசோதித்தல் போன்ற பொலிஸாரின்; சகல நடவடிக்கைகளும் வழக்கம் போல நடைபெறும் எனவும் இதற்கான ஏற்பாடுகள் பயங்கரவாத தடை சட்டத்தில் காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன் பொலிஸ் திணைக்களத்தினால், பொலிஸ் பிரிவுகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றி வளைப்பு தேடுதல் போன்ற நடவடிக்கைகள் வழமைப்போல் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது எனவும் பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்கக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment