ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணிக்காக இலங்கையிலிருந்து 13 ஆயிரத்து 992 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐ.நா வின் பொலிஸ் மற்றும் ஆயுத படை தரப்பினர் தொடர்பில்; ரவிகருணாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஐ.நாவின் அமைதிகாக்கும் படையணி;க்காக இலங்கையிலிருந்து 12 ஆயிரத்து 210 இராணுவத்தினர்கள் 600 கடற்படையினர் 610 விமானப்படையினர் சென்றுள்ளனர்.
இவ்வாறு ஐ.நாவின் அமைதிகாக்கும் படையணியில் இணைந்துள்ள எமது நாட் இராணுவத்தினருக்கு 1028 அnமிக்க டொலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இதேவேளை மேலதிக கொடுப்பனவாக 73 அமெரிக்க டொலர்களும் ஐ.நாவினால் வழங்கப்படுகிறது.
அத்துடன் பொலிஸாருக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 120 முதல் 150 அமெரிக்க டொலர்கள் சம்பளமான வழங்கப்படுகின்றன.
இவர்கள் லெபனான் சூடான் எதியோப்பியா கொங்கோ மொறேகோ, ஹெய்ட்டி, கிழக்கு தீமோர், உள்ளிட்ட நாடுகளில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
No comments:
Post a Comment