Sunday, August 14, 2011

யாழ் அபிவிருத்திற்கு நிதி நெருக்கடி


யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா பற்றாக்குறையாக உள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்து;ளளார்.

உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு மேலதிகமாக 2 ஆயிரம் மில்லியன் ரூபாக்களை தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 355.3 மில்லியன் ரூபா செலவி;டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட உலக வங்கியின் பிரதிநிதிகளிடம் இதனை அவர் கூறியுள்ளார்.

இந்த பணிகளுக்கு மேலதிகமாக 2 ஆயிரம் மில்லியன் ரூபாக்கள் தேவைப்படுவதகா அவர்களிடம் முறையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளுக்கென உலக வங்கி ஆயிரத்து 274.67 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment