Saturday, August 20, 2011

மட்டக்களப்பில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் அதிகரிப்பு


மட்டக்களப்பு - தாண்டியடி பிரதேசத்தில் நடமாடிய மர்ம மனிதர்களை துரத்தி சென்ற மக்களை இராணுவத்தினர் நேற்று விரட்டியடித்துள்ளனர்.

தாண்டியடி, நடராசானந்தபுரம் காட்டுப் பகுதிக்குள்  சில மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மர்ம மனிதர்களை பிடிக்க விடாது தடுத்தமைக்காக மக்கள் இராணுவத்துடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து இராணுவத்தினர் பொதுமக்களைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment